ஐ.நா தீர்மானத்தை அரசாங்கம் நகைச்சுவையாக கருதுகின்றது : ரவி கருணாநாயக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நகைச்சுவையாக கருதுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக தீமானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் தனது முரண்பாட்டுக் கொள்கைகளிலிருந்து சற்றும் மாறவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நகைச்சுவையாகவே கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் ஒரு மேலதிக வாக்கினால் இலங்கை தோல்வியடைந்ததாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் கணித தர்க்கத்தை ஏற்றுக் கொண்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 35 வீதமான வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார் என ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கால நேரத்தை விரயமாக்கும் வகையிலான வாதப் பிரதிவாதங்களினால் ஒட்டு மொத்த நாடே பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply