மே மாதத்தின் பின்னர் வட மாகாணசபைக்கு தேர்தல்

எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மே மாதமளவில் வருடாந்த வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பூர்த்தியாகும் என குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை முறைமை அறிமுகப் படுத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வடக்கு மாகாண சபைக்காக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது.

மே மாதத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் குறிப்பிட்டார் என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி. கட்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர் வடக்கு மாகாணசபைக்கான ஆளும் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக அமைச்சர் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார். இதுவரையில் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல்கள் நடத்தப்படவில்லை. வடக்கு மாகாணசபைக்கான ஆளும் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக அமைச்சர் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply