பத்து எச்சரிக்கை கோபுரங்கள் செயற்படவில்லை ; விசாரணை ஆரம்பம்

சுமாத்ரா தீவுக் கருகில் ஏற்பட்ட நில நடுகத்தையடுத்து இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக் கப்பட்ட போதும் 10 சுனாமி முன்னெச் சரிக்கை கோபுரங்கள் செயற்படவில்லையென விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறியது.

இவற்றைத் திருத்தி செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. கடந்த 11 ஆம் திகதி இந்தோனேஷியா வின் சுமாத்ரா தீவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள், ஊடகங்கள், பொலிஸார் ஊடாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதன்போது 90 வீதமான கோபுரங்கள் இயங்கியதோடு நீர்கொழும்பு, மாத்தறை, கம்பஹா, சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கலான பல இடங்களில் அவை செயற்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை கோபுரங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சு பணித்திருந்தது. நாடு பூராவும் உள்ள 74 கோபுரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 10 கோபுரங்கள் இயங்காதது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் சரத் லால் கூறினார். அவற்றில் 5 முன்னெச்சரிக்கை கோபுரங்கள் பரீட்சிக்கும் நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply