ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 23ம் திகதி கொரியா பயணம்

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.இந்த விஜயத்தின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி பெறுவதற்காக கொரிய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply