சுஷ்மா சுவராஜிடமிருந்து ரணில் பாடம் கற்க வேண்டும்

இந்திய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜிடமிருந்து நமது எதிர்க் கட்சித் தலைவர் பாடம் கற்க வேண்டும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார். இந்திய எதிர்க் கட்சித் தலைவி இலங்கைக்கு வந்து ராஜதந்திரியாக நடக் கையில் நமது எதிர்க் கட்சித் தலைவரோ நாட்டின் உள்ளக விடயங்களை விற்று பிழைப்பு நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

இந்திய பாராளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள இந்திய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவி, இந்திய அரசாங்கத்தை விமர்சிக்கவோ இந்திய பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தோ பேசவோ இல்லை. தான் வந்த பொறுப்பை ஏற்று இராஜதந்திரியாகவே செயற்பட்டார்.

எமது எதிர்க் கட்சித் தலைவர் இவரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். ஆட்சியை பிடிக்கும் ஆசையில் நாட்டின் உள்ளக விடயங்களை வெளிநாடுகளுக்குச் சென்று விற்றுப் பிழைக்கக் கூடாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply