ரணில் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் விஷேட கூட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் சகல உறுப்பினர்களும் கொழும்பில் ஒன்று கூடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கட்சி தலைமைக் காரியாலம் சிறிகொத்தாவில் ஒன்று கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுபபினர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் இந்த கூட்டம் கூடவுள்ளதாக குறிப்பிடப்படடுள்ளது. இதன் போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மே தின கொண்டாட்டம் தெடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply