பர்மிய கடனை ஜப்பான் ரத்துச் செய்தது

பர்மா ஜப்பானுக்குத் திருப்பித் தரவேண்டிய 370 கோடி டாலருக்கும் அதிகமான கடன் தொகையை ரத்து செய்யவும், அந்த நாட்டுக்கு அபிவிருத்தி உதவித் தொகைகள் வழங்குவதை மீண்டும் ஆரம்பிக்கவும் ஜப்பான் உடன்பட்டுள்ளது.ஜப்பானிய – பர்மிய தலைவர்கள் இடையே டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பர்மாவின் மிகப் பெரிய நகரமான ரங்கூனில் விசேட பொருளாதார வலயம் ஒன்றை அமைக்கும் திட்டங்கள் தொடர்பிலும் இருநாடுகளூம் உடன்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலம் இராணுவத்தால் நேரடியாக ஆட்சிசெய்யப்பட்டுவந்த பர்மாவில் சிவிலியன் அமைப்பு தலைமையிலான அரசாங்கம் ஒன்று பொறுப்புக்கு வந்ததை அடுத்து கடந்த ஓராண்டாக அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக இருந்தாலும் பர்மிய மக்கள் ஏழைகளாகவே இருந்துவருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply