பிரசன்ன சில்வா குறித்து நாடாளுமன்றில் விவாதம்; பிரிட்டன் எம்.பி. கோரிக்கை
பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு விவகார அதிகாரியாகப் பணியாற்றும் மேஜர்ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாய்ன் மெக்டொனாக் கோரியுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால் அது போர்க்குற்றவாளிகளை சகித்துக்கொள்வதில்லை என்ற பிரிட்டனின் புகழுக்குப் பங்கமாகிவிடும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெக்டொனாக் வியாழனன்று கூறினார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த குறிப்பொன்று 3 மாதங்களுக்குமுன் பிரிட்டன் வெளிவிவகார அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் மீதான ராஜதந்திரப் பாதுகாப்பை விலக்குவதற்கு அந்த அலுவலகம் மறுத்துவிட்டதாகவும் மெக்டொனாக் கூறினார்.
‘இது குறித்தும் ராஜதந்திரப் பாதுகாப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்தும் விவாதமொன்றை நடத்தலாம் என எண்ணுகிறேன். அவர் விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால் போர்க் குற்றவாளிகளை சகித்துக் கொள்ளவதில்லை என்ற பிரிட்டனின் புகழுக்குப் பங்கமாகிவிடும்.
இலங்கை மீது நாம் மென்போக்கை காட்டினால், நாம் அட்டூழியங்களைப் புரிபவரகளுக்கு அடைக்கலம் வழங்குபவர்கள் என ஏனைய ஆட்சியாளர்களும் நிச்சயமாக கருதத் தொடங்குவர்’ என அவர்கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply