வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது – இலங்கை உறுதி

இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று இந்தியக் குழுவினர் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபட்ச நிராகரித்துவிட்டார்.

முன்னதாக இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து ஆராய வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று காலை ராஜபட்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது வடக்கில் இருந்து ராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் அவரிடம் தெரிவித்தனர்.

வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாகாது எனக் கூறி மறுத்து விட்டார்.

மேலும் குறிப்பிட்ட இடங்களில்தான் படையினர் தளம் அமைத்துள்ளனர். அவர்கள் ஒன்றும் வெளிநாட்டு மண்ணில் நிறுத்தப்படவில்லை. இலங்கையில் தான் நிலைகொண்டுள்ளனர்.

போர் முடிந்த பின்னர் வடக்குஇ கிழக்கில் முன்னர் ராணுவத்தினர் வசம் இருந்த பெருமளவு பகுதிகளை விடுவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply