உத்தியோபூர்வ விஜயம்: ஜனாதிபதி தென்கொரியா சென்றார்
உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்கொரியாவிற்கு நேற்றைய தினம் இரவு சென்றுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐனாதிபதியின் இவ் விஜயத்தின் போது இலங்கை – தென்கொரியாவிற்கிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு கட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்கொரிய வர்த்தக பிரதிநிதிகள் மத்தியில் விஷேட உரை ஒன்றினை ஆற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply