யுத்தத்தில் அவயவங்களை இழந்தவர்களை ஆதரிக்க யாருமில்லை!

இலங்கையில் யுத்தத்தில் சிக்கி உடல் அவயவங்களை இழந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருகிறார்கள்.

இவர்களில் குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்க நேர்ந்துள்ள பெண்களும் பெருமளவில் உள்ளனர். இவ்வாறான பெண்களின் மறுவாழ்வுக்காக முறையான திட்டங்கள் எதிலும் அரசு தரப்பிலிருந்து உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

போர் முடிந்து மூன்றாண்டுகள் கடந்தும் தாம் சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பெண்களின் மறுவாழ்க்கைக்காக முறையான செயற்திட்டங்கள் தேவைப்படுவதாக வடபகுதியில் இயங்கும் வலு விழந்தோருக்கான தொண்டு நிறுவனமொன்று கூறுகின்றது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பெண்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக வலுப்படுத்த முன்னோடி நடவடிக்கை ஒன்றை நடைமுறைப் படுத்தியுள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.



மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply