தென் கொரியாவில் ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுன் கூடிய வரவேற்பு
தென் கொரிய பிரதி வெளிவிவகார அமைச்சர் கிம் சுங் ஹங் ஜனாதிபதி குழுவினரை வரவேற்றார். இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி லீ மயுங் பக்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
பூசான் வணிக மற்றும் கைத்தொழில் சபையின் அனுசரணையுடன் நடைபெறும் இலங்கை – கொரிய வர்த்தக சங்கக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உரை நிகழ்த்தவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலிர் வீரதுங்க, தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் திஸ்ஸ விஜேரத்ன மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜீத் நிவாட் கப்ரால் ஆகியோரும் இலங்கைத் தூதுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply