அரசின் செயற்பாடுகளே இந்தியாவின் அதிகாரத்திற்கு காரணம்!

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு புதுவருடம் கொண்டாடிவிட்டுச் செல்ல இலங்கை வரவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினை என்பது விளையாட்டு அல்ல என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிந்த பின் முகாம்களில் உள்ள மக்களை பார்வையிட தமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதியும் தமக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் ஆனால் இந்திய குழுவினருக்கு அங்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய எதிர்கட்சித் தலைவர், அதாவது பக்கத்துவிட்டு நபர் வந்து எமது நாட்டு பிரச்சினையில் தலையிட அனுமதி உள்ளது விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என இந்திய பிரதிநிதிகளிடம் கூறுகின்றனர். இந்திய குழு சென்றதும் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர அப்படி உறுதி அளிக்கவில்லை என்கிறார்.

தனிஈழக் கோரிக்கையை கருணாநிதி ஐநாவிற்கு முன்வைத்துள்ளார். இலங்கை அரசின் இரட்டை வேடம் காரணமாகவே வெளிநாடுகள் எமக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இவ்வாறு விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply