இந்தியா – நோர்வே இராஜந்ததிர பிணக்கிற்கு வழி வகுத்த பிள்ளைகள் பெற்றோரிடம்

நோர்வேயில் கடந்த ஒரு வருடமாக வெளியாரின் பராமரிப்பில் இருந்துவரும் இரண்டு இந்தியக் குழந்தைகளை அவர்களின் உறவினரிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயின் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த இரு குழந்தைகளும் இந்தியா திரும்பவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அவர்களை சரியாக கவனிக்கத் தவறினர் என்று கூறி, கடந்த ஆண்டு மே மாதம் அவர்களை நோர்வேயின் சமூகநலத்துறை அமைச்சகம் அரச கட்டுப்பாட்டில் எடுத்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டினை அக்குழந்தைகளின் பெற்றோர் மறுத்துள்ளனர்.தாம் இந்தியக் கலாச்சாரத்தின் படியே தமது குழந்தைகளை கவனித்துக் கொண்டதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பெற்றோர்களின் கவனிப்பு பிள்ளைகளை சுதந்திரமாக செயலாற்ற முடியாது இறுக்கமான போக்கில் இருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு பெரிய அளவுக்கு இந்திய ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த விவகாரம் இந்தியா மற்றும் நோர்வேக்கு இடையேயான இராஜந்ததிர பிணக்கிற்கு வழி வகுத்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி, ஒலி-ஒளி செய்திகள்


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply