பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு மிகச் சரியான தருணம் இதுவே! மூன்

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காண இதுதான் சரியான சந்தர்ப்பம். அதற்கு ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கான தனது மூன்று நாள்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போது ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து செயலாளரிடம் கேட்டபோது..

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உத்தரவாதப்படுத்துவதற்கும் அது தொடர்பான விசாரணைகள் பகிரங்கமாகஇ பக்கச்சார்பற்ற வகையில் நடப்பதை உறுதிப்படுத்துவதற்கும் தீர்மானம் மிக முக்கியமானது என்றார். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானக் கவலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது மனித உயிர்களுக்கு முதலாவதும் மிக முக்கியமானதுமான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் நீதியாகவும் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே மிகச்சரியான தருணம் என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். இந்தியப்பயணத்தின்போது பான் கீ மூன் மூத்த அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்துப் பேச்சு நடத்துவுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply