மதுரை கொழும்பு – ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வழங்க அனுமதி
மதுரை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் சர்வதேச விமானம் ஒன்று மதுரையிலிருந்து கொழும்பு நோக்கி இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியினை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங், விருதுநகர் தொகுதி எம்.பி.யான மாணிக் தாகூரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
தென் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் தனியார் விமான நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதாக மாணிக் தாகூர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply