ரஜீவ் காந்தியின் கொலையை பிரபாகரன் நியாயப்படுத்தினார்

யாழ். முஸ்லிகளின் பொருட்களைச் சூறையாடி விற்பனை செய்ததன் மூலம் 100 கோடி ரூபா கிடைத்தது. விநாயகமூர்தி முரளிதரன் (கருணா அம்மான்) பேட்டி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியை கொலை செய்தமை தொடர்பாக எனது அதிருப்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் தெரிவித்த போது, அவர் ரஜீவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தியதுடன் எனது வாதங்ளை ஏற்க மறுத்தார்.

இவ்வாறு தெரிவிக்கிறார் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருமான விநாயக மூர்த்தி முரளிதரன: (கருணா அம்மான்)

இந்தியப் பத்திரிகையான தினமலருக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் வழங்கியுள்ள பேட்டியில்:

புலிகள் இயக்கத்துக்குத் தேவையான பயங்கர ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் தமிழகத்திலிருந்து கடல் வழியாகக் கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலின் பின்னணியில் தமிழகத்தில் புலி ஆதரவு பேசும் தலைவர்கள் இருக்கிறார்கள்.

கடத்தலை முறியடிக்க இலங்கை இராணுவம் முனையும் போதுதான் தமிழகத்தின் அப்பாவி மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் 2001 ஆண்;டில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் நானும் பங்கெடுத்தேன.; பேச்சு,பேச்சு என்று ஐந்து ஆண்டுகளைக் கடத்துங்கள் அதற்குள் நாம் ஆயுதங்களை வாங்கிக் குவித்து மீண்டும் தாக்குதலை நடத்தலாமெனப் பிரபாகரன் என்னிடம் கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களைப் பிரபாகரன் அடித்து விரட்டியதுடன் அவர்களது வீடுகள், வர்த்தக நிலையங்களைச் சூறையாடி அவற்றினைத் தெருக்களில் விற்பனை செய்து 100 கோடி ரூபாவுக்கு மேல் பணம் சம்பாதித்தனர்.

அங்கிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் ஒரு பொருளைக் கூடக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இப்போது போர்க் களத்தில் நிற்கும் பானு என்பவரே இதனைச் செய்தார். இவ்வாறு கருணா அம்மான் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply