தருமபுரம் பகுதியும் கைப்பற்றப்பட்டுளதாக இராணுவம் அறிவிப்பு

வடக்கே முல்லைத்தீவு நகரின் தென்பகுதியிலும், சுண்டிக்குளம் பகுதியில் மண் அரண் அமைத்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் மீதும், இதேபகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்கலம் ஒன்றின் மீதும் விமானப்படையினர் இன்று அடுத்தடுத்து விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் தர்மபுரம் பகுதியை இன்று பிற்பகல் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவம் இரணைமடுவுக்கு கிழக்கே சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமுள்ள விடுதலைப் புலிகளின் ஐந்தாவது விமான ஓடுபாதையையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் களமுனைகளில் பல இடங்களில் விடுதலைப் புலிகளுடன் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகளின் 6 சடலங்கள் வரையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
 
வன்னியில் பாதுகாப்பு இல்லை என்று கூறப்படுகிறது

இதனிடையில் கிளிநொச்சி நகரப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தர்மபுரத்தில் இயங்கிவந்த கிளிநொச்சி பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள் விசுவமடு உட்பட வேறு பல இடங்களில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருவதாக கூறுகின்ற கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி, வன்னி்ப்பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பான இடம் என கூறத்தக்க இடமே இல்லை என குறிப்பிடுகின்றார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply