இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடு இந்தியா! அதிர்ச்சி தரும் ஆய்வு

உலகிலேயே இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வயதிலேயே பெண்கள் தாயாகி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் யுனெஸ்கோ நிறுவனம் பெண்கள் குறித்து நடாத்திய ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், 30 வீதமான பெண்களுக்கு டீன் ஏஜிலேயே திருமணம் செய்துவைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணங்கள் நடப்பதாகவும், அதில் 22 வீதமான பெண்கள் 18 வயதை தாண்டுவதற்கு முன்பாக்வே தாயாகி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேப்போன்று, உலகம் முழுவதும் 47 விழுக்காடு பெண்கள் 20 முதல் 24 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, 18 வீதமான பெண்கள் 20 முதல் 24 வயதிற்குள்ளாக திருமணம் செய்து கொண்ட போதிலும் அதற்கு முன்பாகவே தங்களது துணைகளோடு உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக யுனெஸ்கோ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply