மக்கள் என்ன முட்டாள்களா ? கருணாநிதிக்கு பதிலடி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி தமிழக மாநில மக்களை முட்டாளாக்க முயற்சித்து வருகின்றார் என்று மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி திடீரென தனித்தமிழ் ஈழம் என்று பேசத்தொடங்கியிருப்பதையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்இ தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நெருக்கடிக்கு ஆழ்த்தும் நோக்கில் இலங்கையில் தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டுமென கருணாநிதி கோருகின்றார்.

இந்தக் கோரிக்கை அடிப்படையற்றது. கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த காலத்தில் இலங்கை விவகாரத்தில் அமைதியை பேணி வந்தார். கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து நாடு திரும்பி வெளியிட்ட அறிக்கை இதுவரையில் என்னவாயிற்று எனத்தெரியாது?.

இந்திய எதிர்க்கட்சித் தலைவி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து தகவல்களை திரட்டிச் சென்றுள்ளது. இந்த நிலையில் கருணாநிதி சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வினையே தமிழ் மக்கள் கோருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனையே கோருகிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply