சோனியா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண் மீது தாக்குதல்
சோனியா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற சித்தகங்கா மடத் தலைவரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பெண் சோனியா காந்தி பேசுவதற்கு முன் ஆவேசக் குரல் எழுப்பினார்.
பிறகு அந்தப் பெண் எழுந்து, தங்கள் மடிகா தன்டோரா இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கறுப்புக்கொடி காட்ட ஆரம்பித்தார்.
அந்தப் பெண்ணை வெளியே இழுத்து வந்து தாறுமாறாக அடித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய பெண்களையும் அடித்தனர்.
சோனியா காந்தியின் இரண்டு நாள் கர்நாடக சுற்றுப்பயணத்தில் மத்திய அமைச்சர்கள் எஸ்.எம். கிருஷ்ணாஇ மல்லிகார்ஜூன கார்கே, கே.எச். முனியப்பா, வீரப்ப மொய்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply