செங்கல்பட்​டு ஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்கு வா‌‌ழ்‌வு கொடு‌ங்க‌ள் – ஜெயலலிதாவிடம் கோரிக்கை

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்களை  மனிதநேயத்தோடு விடுதலை செய்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக்கொடுக்க வேண்டும் என்று தமிழக முத‌ல்வ‌ர் ஜெயலலிதாவு‌க்கு பி‌ரி‌ட்ட‌ன் தமிழர் ஒன்றியத்தினால் புலம்பெயர்வாழ் தமிழர்கள் சார்பில் கடிதம் அனுப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக ஜெய‌ல‌லிதாவு‌க்கு அனு‌‌ப்ப‌ப்ப‌ட்ட கடிதத்தில், தமிழக மக்களின் பேரன்பையும் பேராதரவையும் பெற்று தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற தாங்கள், தொடர்ந்தும் திறந்த மனதுடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருவது மகிழ்வையும் உத்வேகத்தையும் தருகின்றது.

கடந்த வாரம் இலங்கை சென்று திரும்பிய இந்திய பாராளுமன்றக் குழுவில் இருந்து தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் முதலில் விலக்கியதோடு தங்களின் ஆளுமையூடாக இலங்கை அரசினதும் இந்திய மத்திய அரசினதும் உண்மை நிலையை சரியாகப் புரிந்து செயற்பட்டமையானது தங்கள் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கொடிய போரின் பின் உறவுகளையும் உடமைகளையும் இழந்து சாவிலிருந்து மீண்டவர்களாய் ஏக்கத்தோடு வாழும் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் உங்களின் இந்த கரிசனைக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

அதேவேளை போர்ச்சூழல் காரணமாக தமிழகம் வந்த எம் ஈழத்தமிழர்களில் சிலரை மூன்று வருடங்களாக தொடர்ந்தும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவர்கள் தங்கள் வழக்குகளைக் கூட எடுத்து நடத்த முடியாத வகையில் தடுத்து வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வேதனையுடன் பார்க்கப்படுகிறது.

தங்களின் விடுதலைக்காக மூன்று தடவைகளுக்கும் மேல் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டும் விடுதலைசெய்வதாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் இன்றுவரை விடுதலை செய்யாது ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்ற மனவிரக்தியுடன் அவல வாழ்வு வாழும் இவர்கள் விடையத்திலும் நீங்கள் மனிதநேயத்தோடு செயற்பட்டு,தொடரும் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்திஇ அவர்களை விடுதலை செய்து இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்துக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பில் வேண்டிநிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply