இம்முறை நாடு முழுவதும் மே தினக் கொண்டாட்டம்: 10,000 பொலிஸார் சேவையில்

மே முதலாம் திகதி இடம்பெறவுள்ள உலக தொழிலாளர் தினக் கூட்டங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா, கினிகத்தேனை, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சி, ஈபிடிபி என்பவற்றின் மே தினக் கூட்டம் இடம்பெறுகிறது.

நுவரெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டமும், கினிகெத்தனையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டமும் பூண்டுலோயாவில் மலையக மக்கள் முன்னணியின் கூட்டமும், மஸ்கெலியாவில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் கூட்டமும், பொகவந்தலாவையில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் கூட்டமும் ஹட்டனில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் மாநகர சபை வளவில் இடம்பெறவுள்ளதோடு இதற்கு கெம்பல் மைதானம், ஆயுர்வேத சுற்றுவட்டம், நாராஹென்பிட்ட பகுதிகளில் இருந்து பேரணிகள் வரவுள்ளன.

மே தின கூட்டங்களை முன்னிட்டு 10,000ற்கும் அதிகமான பொலிஸார் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மே தினக் கூட்டங்களுக்கு என பொது மக்களை ஏற்றிவரும் பஸ் உள்ளிட்ட வாகன சாரதிகள் மித வேகத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply