சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்திய அரசு விருது

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனுக்கு, ‘பாரதிய சம்மான்’ விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் நீண்ட ஜனாதிபதியாக இருந்தவர் எஸ்.ஆர்.நாதன். கடந்த 1999ம் ஆண்டிலிருந்து ஜனாதிபதியாக இருந்த நாதன், 87, வயோதிகம் காரணமாக கடந்த ஆண்டு பதவியில் விலகினார். இவரது சேவையை பாராட்டி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் டில்லியில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் இந்த விருதைப் பெறஇ நாதன் வரவில்லை.

இதையடுத்து, வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி, சிங்கப்பூர் சென்று, நேற்று நடந்த விழாவில் நாதனுக்கு இந்த விருதை வழங்கினார்.இந்த விருதை பெற்றுக் கொண்ட தமிழரான நாதன் குறிப்பிடுகையில்,

‘இந்த விருது எனக்கு கொடுக்கப்பட்டதல்ல; சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் கொடுப்பட்டதாகும். இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு மேலும் பலப்பட, நமது கலாசாரம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். நமது கலாசாரம் இல்லையென்றால், நம்மிடையே உறவுகள் காணாமல் போகும்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply