சர்ச்சைக்குரிய நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாவதற்கு தகுதியானவர் அல்ல – ஊரன் அடிகள்
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக, சர்ச்சைக்குரிய நித்தியானந்தா நியமிக்கப்பட்டிருப்பது, மரபுகளுக்குப் பொருந்தாத நியமனம் என்று தமிழ்நாட்டின் வடலூரில் உள்ள சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்தவரும், சைவ ஆதீனங்கள் பற்றிய நூல்களை எழுதியவருமான ஊரன் அடிகள் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக, நித்தியானந்தா நியமிக்கப்பட்டது பொருத்தமற்றது என்று ஊரன் அடிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஹமதுரை ஆதீனம், சைவ ஆதீனம். நித்தியானந்தா, வேதாந்தத் துறவி. அதுவும், சமீபத்தில் பாலியல் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியவர் நித்தியானந்தா. அவர் மீது தவறு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டாலும் கூட, சர்ச்சைக்குரிய ஒருவர் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டிருப்பதை சைவ உலகம் ஏற்றுக்கொள்ளாது’ என்றார் அவர்.
அதே நேரத்தில், அடுத்த மடாதிபதியை நியமிக்க தனக்கு அதிகாரம் இருப்பதாக மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்து சரியானது என்றும் ஊரன் அடிகள் தெரிவித்தார்.
மடத்திலேயே பயிற்சி பெற்ற சீடர்களில் ஒருவரை நியமிப்பது வழக்கம் என்றும், தற்போது மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு கோயில்களை நிர்வகிக்க அவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்காமல் தொலைதூரம் சென்று நித்தியானந்தரை தேர்ந்தெடுத்தது முறையானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மடாதிபதிகள் நியமனங்களை நெறிமுறைப்படுத்த, தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தலையிட முடியாது என்று ஊரன் அடிகள் குறிப்பிட்டார். இதுபோன்ற முன்மாதிரி இல்லாததால் அப்படிப்பட்ட நிலை இதுவரை வரவில்லை என்றும், இனிமேல் அதுபோன்ற யோசனைகள் வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நித்தியானந்தா நியமனத்தில் பணம் முன்னுரிமை பெற்றிருப்பதாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட ஊரன் அடிகள், அந்த நியமனம் தொடர்பாக யாராவது பொதுநல வழக்குத் தொடரவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply