தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம் – கா.அன்பழகன்

இலங்கையில் தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம் என்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.பொதுச்செயலாளர் பேராசிரியர் கா.அன்பழகன் மேலும் கூறியதாவது-

நாட்டு மக்கள் சமவுரிமை பெற்று வாழ வழிவகுத்த இயக்கம், திராவிட இயக்கம், திராவிட இயக்க கொள்கை மற்றும் இலட்சியங்களை தி.மு.க. தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இலங்கையில் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க. வின் விருப்பம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் டெசோ கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

உடனடியாக உத்தரவு போடும் இடத்தில் நாம் இல்லை. நமது வேண்டுகோளை இலங்கை அரசு மதிப்பதாக இல்லை. இந்திய அரசு நமக்கு அனுதாபம் காட்டுகிறது. அந்த அனுதாபத்தை பயன்படுத்தி எந்த அளவுக்கு நம்முடைய ஈழத் தமிழர்களை காப்பற்றலாமோ, பாதுகாக்க வழி செய்யலாமோ அதை செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய குறிக்கோளாக நோக்கமாக இருக்கிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply