செஞ்சிலுவை சங்க டொக்டர் தலை துண்டித்துப் படுகொலை
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க டொக்டர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சங்கத்தில் பல நாடுகளை சேர்ந்த டொக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த கலீல் ரஸ்ஜெட் டேல் என்பவர் கடந்த ஜனவரி 5ம் திகதி கடத்தப்பட்டார். அவரை பொலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகர பைபாஸ் சாலையோரம் கலீல் சடலத்தை பொலிசார் கண்டெடுத்தனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்தது. அதன் மீது கருப்பு பேனாவால், கலீல் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதனால் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
செஞ்சிலுவை சங்க டைரக்டர் ஜெனரல் யூவ்ஸ் டக்கார்ட் கூறுகையில், கலீல் படுகொலை செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. கலீல் படுகொலைக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் இங்கிலாந்து செஞ்சிலுவை சங்கத்தினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply