சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றுக்கு திடீர் மாற்றம்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகள் 3 பேர் தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தொடர்பான இறுதி முடிவை உச்ச நீதிமன்றம்தான் அறிவிக்கும்.

கட்ந்த 1991 ல் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் வேண்டினர்.

இதற்கிடையில் நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். எனவே எங்களின் தூக்கு தண்டøனையை குறைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர்களின் தண்டனையை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சிங்வி மற்றும், முகோபாத்யாய நீதிபதிகளை கொண்ட பெஞ்ச்., இன்று 1ம் திகதி முக்கிய உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி இந்த கொலையாளிகள் மனுவை இனி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும். இந்த மனு மீது வரும் ஜூலை 10 ம் திகதி விசாரணை துவங்கும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply