ஒரு மரியாதையின் நிமித்தமே ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது
ரிக்கெட்டில் நான் ஆற்றிய சேவைக்காகவே ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது என நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக அறிவிக்கப்பட்ட பின்னர் சச்சின் இன்று நிருபர்களை சந்தித்துப் பேசினார். இதன் போது அவர் கருத்துப் பகிருகைளில்,
வாழ்க்கையில் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கும் கல்வி மிக அவசியமானது. மனித முன்னேற்றத்திற்கு எந்தவொரு தடைகளும் வெற்றியாக மாற்றப்பழக வேண்டும்.
தோல்வியை கண்டு துண்டு விடக்கூடாது. 2003 ல் நடந்த உலக கோப்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
நான் அரசியல்வாதி அல்ல என்றும், கிரிக்கெட்டிற்கு ஆற்றிய சேவைக்காக ராஜ்யசபா எம்.பி. பதவி ஒரு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டது.
இதற்காக கிரிக்கெட்டை நான் ஒதுக்க மாட்டேன். இது என் வாழ்நாளில் ஒரு அங்கம் என்றும் கூறினார். இன்று சச்சின் கிரிக்கெட்டிற்குள் நுழைந்து 23 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு அவர் நிருபர்களை சந்தித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply