எம் வி சன் சீ கப்பல் அகதிகளில் மேலும் இருவர் நாடு கடத்தப்படுகின்றனர்
எம் வி சன் சீ கப்பலில் சென்ற மேலும் இருவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு உத்தவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எம் வி சன் சீ கப்பல் 492 இலங்கையர்களை ஏற்றியவாறு பிரிட்டிஷ் கொலம்பியா வழியாக கனடாவைச் சென்றடைந்தது.
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் ஒருவரையும் புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதான குற்றத்தில் மற்றுமொருவரையும் நாடு கடத்துமாறு கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சன் சீ கப்பலில் சென்ற 19 பேர் இதுவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply