மதுரை ஆதீனத்திற்கு 10 நாள் கெடு: மிறினால் சட்ட நடவடிக்கை என தீர்மானம்!
நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் அடுத்த பட்டத்திற்கு உரியவர் என ஆதீன கர்த்தர் அறிவித்துள்ளதை இன்னும் 10 நாளில் வாபஸ் பெற வேண்டும்.
இந்த தீர்மானத்தை ஏற்காமல் தொடர்ந்து தமது விருப்பப்படி மதுரை ஆதீனம் செயல்பட்டால், சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ஆதினங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமை ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் தருமபுரம் ஆதீனம் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவாவடுதுறை, சூரியனார்கோயில், திருப்பனந்தாள் காசிமடம், காமாட்சிபுரி, துலாஊர் ஆதீனம், செங்கோல் ஆதீனம், சிதம்பரம் மவுன ஆதீனம், ஊரனடி சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சைவ சமய மரபு முறை, நியதி ஆதீன சம்பிரதாயங்களை புறந்தள்ளி விட்டு கர்நாடக மாநிலத்தில் வசிப்பவரும், சைவ சமய நெறிகளை உணராதவரும், குற்ற பின்னணி உடையவருமான நித்யானந்தாவை 293வது பட்டத்திற்கு உரியவராக மதுரை ஆதீனம் அறிவித்திருப்பது அறம் அல்லாத செயல் என கருதுகிறோம்.
ஏதோ ஒரு சூழலில் நெறியல்லாத நெறியில் செல்லும் மதுரை ஆதீன கர்த்தரையும், ஆதீனத்தின் பெருமை மற்றும் சொத்துக்களையும் காக்க வேண்டிய கட்டுப்பாடு எங்களுக்கு இருப்பதை உணர்ந்து, மதுரை ஆதீனத்தை இந்த கூட்டத்திற்கு அழைத்தோம். ஆனால், அவர் பங்கேற்கவில்லை என்று ஆதீன கர்த்தாக்கள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply