அநுராதபுரத்தில் அதிரடிப்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்றம்
அநுராதபுரம் – மிலச்சிய பகுதியில் இன்று காலை ஒருவகை பதற்ற நிலை ஏற்பட்டது.
பிரதேசவாசிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் புதையல் தோண்டியதாக குற்றம் சுமத்தி பிரதேச மக்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட முயற்சித்துள்ளனர்.
எனினும் தேடுதல் நடவடிக்கைக்குச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் பொது மக்கள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதையல் தோண்டிய சம்பவத்துக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மிலச்சி பிரதேசத்தின் பதற்ற நிலைமை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply