முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இனப் படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும்! புலம்பேர் தமிழர்களின் தொலைநகல் போராட்டம்

முள்ளிவாய்க் காலில் நிகழ்ந்த படுகொலைகளை இனப் படுகொலையாக அங்கீகரிக்க வேண்டும் என் கோரி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன்னுக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்னி மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் அந்த தொலைநகலில் தெரிவிக்கப்படுகிறது.

மே 18 நினைவு நாள் அமெரிக்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்தத் தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ருவாண்டா படுகொலைகளின் 19ஆவது நினைவு நாளை முன்னிட்டு அண்மையில் ஹிலாரி கிளின்ரன், அங்குள்ள மக்களுக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொலைநகலைக் ஹிலாரி கிளின்ரனின் தொலைபேசி இலக்கங்களுக்கும் அதன் பிரதியை வெள்ளை மாளிகைக்கும், சாத்தியமிருந்தால், புலம்பெயர் தமிழர்கள் தாம் வதியும் நாட்டின் அரச தலைமைக்கும் அனுப்புமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply