ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச ஆதரவைப் பெற டெசோ உதவும்! திருமாவளவன் நம்பிக்கை
தி.மு.க. டெசோ அமைப்பை தொடங்கி இருப்பதை வரவேற்கிறோம். சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற இது உதவும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது,
இலங்கை சென்ற குழுவில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க்.கள் பிரதமரிடம் ராஜீவ், ஜயவர்த்தன ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என அறிக்கை சமர்பித்து உள்ளனர். இது சரி வராது.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதியை தனியாக சந்தித்து பேசியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஈழத்தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும். அங்கிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply