நாட்டில் வாழும் சகல மக்களும் அச்சமின்றி வாழும் நிலை உருவாகும்:பொங்கல் விழாவில் ஜனாதிபதி
“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார் கள். இந்த வகையில் எமது மக்கள் அனை வருக்கும் நல்லவழி உருவாகுமென நாம் உறுதியுடன் இருக்கின்றோம். இந்தப் பொங் கலை இந்துக்கள் அனைவரும் சந்தோஷ மாக கொண்டாடியிருப்பார்களென உறுதியாக நம்புகிறோம்.” இவ்வாறு ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் கூறினார். கண்டி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் தமிழில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-
நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பய மின்றி சந்தோஷமாக வாழக் கூடிய நிலை வெகு விரைவில் நிச்சயமாக உருவாகும். அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சகல மக்களும் சம உரிமைகளுடனும் சமத் துவத்துடனும் வாழ வேண்டும். அந்த நிலை உருவாவது உறுதி.
எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நாம் இந்த நாட்டு மக்களே. நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாவோம். சகல மக்க ளையும் காக்க வேண்டியது எனது கடமை யாகும். அந்தப் பொறுப்பை நிச்சயமாக நிறைவேற்றுவேன். நாட்டு மக்கள் அனை வருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும். எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு ஜனாதிபதி தமிழில் உரையாற்றினார்.
2009 அரச தைப்பொங்கல் விழா நேற்றுக் காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ‘பிரஜாசக்தி’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத் தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதியும், பாரியாரும் மேளதாளங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று அழைத்து வரப்பட்டனர். ஜனாதிபதியையும் பாரியாரையும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து கெளரவித்தார்.
தைப்பொங்கல் விழாவையொட்டி நேற்றுக் கண்டி ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. வாழை, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழர் பண்பாட்டு மரபுகளைச் சித்தரிக்கும் கலையம்சங்களுடன் ஜனாதிபதி மாளிகையும் அதனை அண்டிய பிரதேசங்களும் காட்சியளித்தன.
பொங்கல் பண்டிகையைச் சித்தரிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பொங்கல் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதியையும் அவரது பாரியாரையும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வரவேற்றார். மேளதாளத்துடன் நாதஸ்வர இசை முழக்கத்தின் மத்தியில் இவ்வரவேற்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் பொங்கப்பட்டது. பால் பொங்கிவரும் போது ஜனாதிபதியும் அவரது பாரியாரும் பொங்கலுக்கு அரிசியிட்டனர். ஜனாதிபதியொருவர் அரிசியிட்டு பொங்கல் பொங்கியது இலங்கை வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.
மூவின மக்களும் செறிந்து வாழும் கண்டி மாநகரில் நடாத்தப்பட்ட இப்பொங்கல் விழாவில் சகல மதத்தினரும் கலந்து கொண்டதுடன் மலையகப் பெருந்தோட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் பெருமளவு மக்களும் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் ‘பிரஜா சக்தி’ அமைப்பின் அங்கத்தினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசில்களை வழங்கி கெளரவித்தார்.
இவ்விழாவில் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமானுடன், மைத்திரிபால சிரிசேன, சி. பி. ரத்நாயக்க, டி. எம். ஜயரத்ன, கெஹெலிய ரம்புக்வெல்ல, அமரசிரி தொடங்கொட, முத்துசிவலிங்கம், ராஜித சேனாரத்ன, ரோகன திசாநாயக்க, சுமேதா ஜயசேன, முன்னாள் அமைச்சர்களான ஜெனரல் அனு ருத்த ரத்வத்த, முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, நாடாளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பிரதி அமைச்சர்களான எஸ். ஜெகதீஸ்வரன், எம். சச்சிதானந்தன், மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், இ. தொ. கா. அமைப்பாளர்கள், பிரஜா சக்தி நிலைய அமைப்பாளர்கள், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply