மே தின கூட்டத்தில் புலிக் கொடி பறந்தமைக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மே தின கூட்டத்தில் புலி கொடி ஏந்தி ஒருவர் வந்தமைக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் எற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அப்படி பொறுப்பேற்காவிட்டால் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக தோற்கடிக்கவில்லை என்றே பொருள்படும் என ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
கூட்டத்தை வீடியோ பதிவு செய்த அனைத்து ஊடகவியலாளர்களின் கமராக்களுக்கு அகப்படாத புலிக் கொடி ஏந்தியவர்களின் காட்சி குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளரின் கமராவுக்கு மாத்திரம் அகப்பட்டமை திட்டமிட்ட செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலி கொடி காட்டியவர்களை கைது செய்யாதது தவறு எனக் குறிப்பிட்ட அவர், புலி கொடியை காட்டிய நபர்களை அரச ஊடக வாகனம் ஒன்று ஏற்றிச் சென்றதாக ஹரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்கட்சி மே தினக் கூட்டத்தில் புலிக் கொடி ஏந்தியவாறு சிலர் வந்திருந்ததாக அரச தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.
இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஹரேன் பெனாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply