கிரிஸ் போவன் மற்றும் கோட்டாபாய ராஜபக்ஷ இன்று சந்திப்பு

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளுக்கு இடையிலான வானூர்தி சேவை உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை வருகை தந்துள்ள அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் கிரிஸ் போவன் நேற்றைய தினம் வெளிவிவகார பிரதியமைச்சர் நியுமால் பெரேரவை சந்தித்துள்ளார். இதன் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை இலங்கையின் பொதுவானூர்திகள் சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ண மற்றும் கிரிஸ் போவன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிரிஸ்போவன் நீதியமைச்சர் ரவுப் ஹக்கிமை சந்தித்துள்ளார்.

இதுதவிர அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் கிரிஸ் போவன் இன்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே இலங்கை வருகை தந்துள்ள கிரிஸ் போவன் நாட்டின்  அரசியல் செயற்பாட்டாளர்கள், மற்றும் அகதிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயாராரிப்பதற்காகவே இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply