தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காண தடையாக உள்ள விஷயங்கள் குறித்து பேசவதற்காகவே கூட்டமைப்பினர் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்தியா செல்லவுள்ள குழுவினர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பாராளுமன்ற எதிர்க் கட்சிக் குழுவினர் இலங்கை வந்த போது கூட்டமைப்பிற்கு இந்தியாவிற்கான விஜயம் மேற்கொள்ளும் படி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply