பயங்கரவாதத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்த நாடுகளில்இலங்கை முன்நிலையில்:நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒவ்வொரு வேட்பாளர் பட்டியலிலும் குறைந்தது ஒரு படைத்தரப்பினரின் பெயராவது உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார். 
 
நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு தமது உயிர்களைத் தியாகம் செய்த இராணுவத்தினர் அனைவராலும் நினைவூறப்படவேண்டியவர்கள் என அமைச்சர் கூறினார்.

“ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் தியாகங்களைச் செய்துள்ளனர். இவர்களை அனைத்துப் பிரஜைகளும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் ஒரு அங்கமாக பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த ஒருவரையாவது மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

அண்மைய காலத்தில் பயங்கரவாதத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்த நாடுகளில் இலங்கையே தற்பொழுது முன்நிலையில் நிற்பதாக அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply