பிரித்தானிய தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி

பிரித்தானியாவில் நடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கான்சர்வேட்டிவ் கட்சியும், லிபரல் டெமொகிரட்டிக் கட்சியும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன.

அதேவேளை, எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரும் வெறிபெற்று வருகிறது.

அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி கவுன்ஸில்களுக்கான முடிவுகள் வந்திருக்கும் நிலையில், இதுவரை தொழிற்கட்சி 470 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியிருக்கிறது.

கான்சர்வேட்டிவ் கட்சி சுமார் 280 இடங்களை இழந்திருக்கிறது. லிபரல் டெமொக்கிரட்டிக் கட்சி 180க்கும் அதிகமான இடங்களை இழந்திருக்கிறது.

வாக்களிப்பு வீதம் கடந்த 12 வருடங்களில் இந்தத்தடவை மிகவும் குறைவாகும்.

அரசாங்கத்தின் செலவு வெட்டுத் திட்டத்துக்கான மக்களின் தீர்ப்பாக இந்த முடிவுகளைப் பார்க்க முடியும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply