சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி விவாதம்!

சட்டமன்றத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றை மேற்கோள் காட்ட அதற்கு பதிலடியாக முதல்வர் ஜெயலலிதா வேறொரு பாடலை மேற்கோள் காட்ட சட்டமன்றத்தில் நேற்று எம்.ஜி.ஆர். பாடலை வைத்து மோதல் எழுந்தது.

கேள்வி நேரத்தின் போது திருத்தணி தொகுதி தே.மு.தி.க. உறுப்பினர் அருண் சுப்ரமணியன் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கிரானைட் கற்கள் மற்றும் வெள்ளைப்பாறைகள் அதிக அளவில் கிடைப்பதால் அங்கு ஏற்றுமதி மையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என்றார்.

இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.

ஆனால் அவரது பதிலில் திருப்தி அடையாத தே.மு.தி.க. உறுப்பினர் அருண் சுப்ரமணியன், “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற எம்.ஜி.ஆர். பாடலை கோடி காட்டினார். அதாவது எல்லா வளங்களும் நம் மாநிலத்தில் உள்ளன அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

அப்போதுதான் சட்டமன்றத்திற்கு வந்த ஜெயலலிதா, தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடலை மேற்கோள் காட்டினார். ஆனால் அவர்களுக்கு எம்.ஜி.ஆரின் அனைத்து பாடல்களும் பிடிக்காது என நினைக்கிறேன். சில பாடல்கள் மட்டுமே அவர்களுக்கு பிடித்திருக்கிறது.

நேற்று முந்தினம் இந்த மன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட எம்.ஜி.ஆர். பாடலான, “நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்துவிட்ட, நாட்டைக் கெடுப்பதுடன் தாமும் கெட்டார்” என்ற பாடல் வரிகள் மட்டும் அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை. என்று கூறி அமர்ந்தார்.

இதனையடுத்து அ.தி.மு.க. அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசும்போது, இதே பாடலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை குறிப்பிட்டு பேசினார்.

இதனால் தே.மு.தி.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply