இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கும்
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்காக, இந்திய அரசு அவர்களுக்கு உறுதியான ஆதரவை அளிக்கும் என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்து சென்ற இந்தியக் குழுவை சந்தித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் பின்னதாக ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர்,
எம்.பிக்களின் சுற்றுப்பயணம் ஆக்கபூர்வமானதாகவும் பயன் அளிப்பதாகவும் உள்ளதாக தெரிவித்தார். குழுவினர் அளித்த அறிக்கையை பரிசீலித்து, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
போரின்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இராணுவ நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், பொலிஸ் படையில் தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என எம்பிக்கள் பிரதமரிடம் கூறியுள்ளனர்.
இலங்கையின் வடக்குப்பகுதியின் முன்னேற்றத்துக்கு அதிக முயற்சி மேற்கொள்வதுடன் அங்கு தேர்தலை உடனடியாக நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களும், டாக்டர்களும் அங்கு மிகவும் குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் இருந்து தேவையான ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply