மாபெரும் மே தின ஊர்வலம்- சிறி டெலோ நாடளாவிய சாதனை
கடந்த மே தினத்தில், சிறி டெலோ கட்சி தொழிலாளர்களின் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன் பின்னர் திரு. உதயராசா தலைமையில் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் பகல் சுமார் 3.00 மணியளவில் ஆரம்பமாகியது. மக்கள் கூட்டம் கூட்டமாக அணிதிரண்டனர். அலைபோல் மக்கள் வெள்ளம் சாரிசாரியாக வீதி நெடுகிலும், கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது ஊர்வலமாக வந்த வண்ணம் இருந்தனர்.
வவுனியா நகரம் வரலாறு காணாத அளவு கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறி டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. உதயராசா தலைமையில், மற்றும் கட்சிப் பிரமுகர்களுடன் ஊர்வலம் இலுப்பையடியில் ஆரம்பமாகி, கலைமகள் மைதானத்தில் அமைக்கப்பட்ட கூட்ட மேடையை வந்தடைந்தது. கட்சிக் கொடிகள், மே தின பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்களும், பல ஊர்திகளும் வவுனியா நகர வீதிகளில் திரள் திரளாக வந்த வண்ணம் இருந்தனர். பலதரப் பட்ட மக்களும் கலந்து கொண்டதோடு, வவுனியா நகரத்திலே இவ்வளவு மக்கள் கூட்டம் அணி திரண்டதைக் கண்டு ஆச்சரியமுற்றனர்.
கூட்ட நிகழ்வில், பலதரப்பட்ட பிர்முகர்கள் உரையாற்றியதோடு, தொழிலாளர்கள் பலரும் பொன்னாடை போர்த்தியும், பொற்கிழி வழங்கியும் கௌரவிக்கப் பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிஷோர், சிற்ப்பு விருந்தினராகக் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது. அவர் தனது உரையிலே, திரு. உதயராசாவை வாழ்த்திப் பேசியதோடு, இன்றைய நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், வவுனியா மக்கள் தமது மண்ணின் மைந்தனின் தலைமையை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதே வேளை, யாழ் நகரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து மே தினக் கொண்டாட்டங்களை நடாத்தினர். கொழும்பில் ஆழும் கட்சியினர் நடாத்திய கொண்டாட்டங்களும், ஜே. வீ. பீ யினரின் ஊர்வலமும் அதிக சனத்தொகையினரை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இப்படியிருக்க, ஊடகங்கள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட பாரிய மே தின நிகழ்வுகளில், சிறி டெலோவின் வவுனியா நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்தும் வழங்கியிருந்தமை, ஒரு பாரிய சாதனையாகவே கருதப்படுகிறது. ஒரு தமிழ் கட்சியினால் நடத்தப் பட்ட மே தின நிகழ்வுக்கு தேசிய முக்கியத்துவம் வழங்கப்பட்டமை உண்மையில் பெருமைக்குரிய விடயம். மேலும் இது தமிழ் மக்களின் ஒற்றுமையால் சாத்தியமாகிய விடயம் மட்டுமல்லாது, புதிய அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும் முயற்சியில் வன்னி மக்கள் கண்டிருக்கும் வெற்றி எனவும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்திருக்கும் அதே வேளை, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பாரிய கட்சிகள் புதிய அரசியல் தலைமுறையினரை அரவணத்துப் போகாத மெத்தனப் போக்கின் பிரதிபலிப்பே என்றும் விசனப்பட்டனர்
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply