இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீது நடத்திவரும் தாக்குதல்கள் நிறுத்தப்படுமா என்பது ஓரிருநாட்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்:மு.கருணாநிதி

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் முக்கியமானதொரு முன்னேற்றம் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்தார். 
 
இந்த விஜயத்தின் மூலம், இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீது நடத்திவிரும் தாக்குதல்கள் நிறுத்தப்படுமா என்பதை ஓரிரு தினங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 50 வருடங்களாக இலங்கைத் தமிழர் விடயத்தில் நான் பலவற்றைச் செய்துள்ளேன். மேலும் செய்வதற்குத் தயாராகவே உள்ளேன். மேலும் என்ன செய்யப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதை உங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன்” என கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயம் குறித்து சிறந்ததொரு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில் திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தமிழக முதல்வர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழக முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளக் கூடியவகையிலான தீர்மானமொன்றை எடுப்பார் என்பதால், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ், திருமாவளவனிடம் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply