ஆஸ்துமா உயிர் கொல்லி நோய்களில் ஒன்று! உலக ஒவ்வாமை மாநாடு இம்முறை இந்தியாவில்
சுவாச ஒவ்வாமை நோய் அதிலும் குறிப்பாக ஆஸ்துமா உயிர் கொல்லி நோய்களில் ஒன்று. இந்நோய் உலக அளவில் கவலையளிக்கும் விதத்தில் வேகமாக பரவி வருகிறது.
நோய்க்கு மரபு, அதிகரித்து வரும் நகர்மயம், காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, புகைப்பிடித்தல் ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
இச்சூழலில் புதிய மருந்துகள் உருவாக்குவது மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வது குறித்து விவாதிக்க உலக ஒவ்வாமை மாநாடு வரும் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.
இம்மாநாடு டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும் என்று இம்மாநாட்டின் தலைவர் டாக்டர் சுதர்சன ரெட்டி தெரிவித்தார்.
இம்மாநாடு இரண்டாண்டிற்கு ஒருமுறை நடைபெறுவதாகவும் இந்தியாவில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்கள் போன்றவற்றை குணப்படுத்துவது மற்றும் அந்நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆராய்வதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply