இந்தியாவில் ஹிலாரி: இந்தியா-அமெரிக்கா பேச்சுவார்தைக்கான முதற்படி
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா மற்றும் வங்களாதேசத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து, வங்காளதேசத்தில் இருந்து புறப்பட்டு இன்று கொல்கத்தா வழியாக இந்தியா வருகிறார். கொல்கத்தா வருகை தரும் அவர் மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை டெல்லிக்குச் செல்கிறார்.
டெல்லியில் அவர் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை சந்திக்கிறார். எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கும்போது வாஷிங்டனில் வருகிற ஜூன் 13ஆம் திகதி நடைபெற உள்ள இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கிறார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு குறித்த சூழ்நிலைகள், ஆப்கானிஸ்தான், பொருளாதார வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அணு ஆயுதம் உற்பத்தி செய்வதாக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்தும் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-வங்காளதேசத்துக்கு இடையே தீஸ்தா நதி நீர் ஒப்பந்தம் உள்ளது. இதற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவரை சந்திக்கும்போது இதுகுறித்து ஹிலாரி பேசுவார் என தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply