தமிழ் அரசியல் கைதிகளுக்கான நியாயமான தீர்வை இலங்கை முன்வைக்க வேண்டும்!
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீண்ட கால கைதிகள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட காலமாக இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய பாராளுமன்றின் தெற்கு ஆசிய தொடர்புகளுக்கான தலைவர் ஜீன் லம்பேர்ட் இன்று தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கு மேற்பட்ட புலிச் சந்தேகநபர்கள் மற்றும் அரசியல் கைதிகள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களில் சிலர் பல மாதங்களாக பல வருடங்களாக விசாரணைகளை சந்திக்கவில்லை.
அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. இவ்வாறு இலங்கை சிறுபான்மை தமிழ்க் கட்சிகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிணை கோரியுள்ள சரத் பொன்சேகா தொடர்பிலும் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் சிலர் இன்னும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய பாராளுமன்ற குழுவினர் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் அரசியல் தலைவர்களை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக ஜீன் லம்பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply