ஊடகங்களே இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கு முக்கிய தடையாக இருக்கின்றன
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து தமது கருத்துக்களை முன்வைத்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிகமாக நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றுவது போன்ற அரசியலமைப்புத் திருத்தங்களையும் கோரியிருக்கிறது.
இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, ஆளும் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை அரசிடம் முன்வைத்து வருகின்றன.
ஊடகங்களே இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கு முக்கிய தடையாக இருப்பதாகக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டியூ குணசேகர குற்றஞ்சாட்டினார்.
தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இலங்கைப் பிரச்சனையை ஒவ்வொரு கோணங்களில் அணுகுவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையில் யுத்தம் முடிந்த சூழ்நிலையில், அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஐநாவின் நிபுணர் குழுவும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் இந்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இலங்கையிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதியால் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழுஇ நாட்டின் பல இடங்களிலும் விசாரணை அமர்வுகளை நடத்தியபின், அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை உரியமுறையில் நடைமுறைப்படுத்துமாறு ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply