இராணுவ வீரர்களிடையே கலவரம்: 309 இராணு வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை
பங்கயாதேஸில் இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட கலவர வழக்கில் 309 இராணு வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பங்கதேஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பங்களதேஸில் கடந்த 2009-ம் ஆண்டு பெப்ரவரி 25,26-ம் திகதிகளில் இராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது.
இதில் இராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 74 இராணு வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நான்கு நீதிபதிகள் கொண்ட பங்கதேஸ் சிறப்பு பாதுகாப்பு நீதிமன்றத்தில் (பி.ஜி.பி.) விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையில் இராணுவ விதிகளை மீறியது, ஒழுங்கு நடவடிக்கையை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்ட 309 இராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply