ஐ.தே.க ஆதரவாளர்கள் 6000 பேர் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் அரசுடன் இணைவு
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 6000 ஐ. தே. கட்சி அங்கத்தவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ முன்னிலையில் ஸ்ரீல. சு. கட்சியில் இணைந்து கொண்டனர். இந் நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்றது.
மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் ஐ. ம. சு. கூ. ஆதரிக்கும் பொருட்டு கண்டியில் ஒன்று கூடிய இவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு நான்கு திசைகளிலிருந்தும் ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஜனாதிபதியை ஆதரி த்து எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கிய வண்ணம் ஊர்வலமாக வந்தனர்.
இவர்கள் யட்டிநுவரை, உடுநுவரை, ஹாரிஸ்பத்துவ, பாத்ததும்பறை, கலகெதர, தெல்தெனிய, கம்பளை, நாவலப்பிட்டி, குண்டசாலை, உடதும்பறை உள்ளிட்ட 13 தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.
சுமார் ஐந்தாயிரம் பேரே இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் கூட சுமார் 6000 பேர் கூடியிருந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பக் கூடிய திறமை ஜனாதிபதியிடமே உண்டு. அவரையே நாங்கள் ஆதரிப்போம், அவரே எமது தலைவன் என சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை இவர்கள் தாங்கி நின்றனர்.
திரண்டு வந்த அனைவரையும் ஜனாதிபதி மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இத் தொகையானோர் இவ்வாறு ஒன்று கூடி ஆளும் கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவித்த முதல் சம்பவம் இதுவே என்று சிரேஷ்ட அமைச்சர் டீ. எம். ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த ஊர்வலத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளை பிரதி நிதித்துவப்படுத்தும் ஐ. தே. கட்சியைச் சேர்ந்த 29 பேரும் அடங்குவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply